நான்
போகும் பாதையில்
பூத்தூறல்
சொல் பெண்ணே
வந்து சென்றது
நீ தானே!
என்
வியர்வை மேனியில்
பூவாசம்
சொல் பெண்ணே
கடந்து சென்றது
நீ தானே!
பருக்கை
உண்ணுகையில்
புரையேற்றம்
சொல் பெண்ணே
நினைத்து கொண்டது
நீ தானே!
பாதி
தூக்கத்தில்
உளறல் சத்தம்
சொல் பெண்ணே
கனவில் வந்தது
நீ தானே!
பேசும்
வார்த்தைகளில்
உனது தாக்கம்
உண்மையை சொல் பெண்ணே
உண்மையை சொல் பெண்ணே
இதயம் துளைத்தது
நீ தானே!
- மன்சூர்

No comments:
Post a Comment