Thursday, 31 October 2013

வின்னை தாண்டி வருவாயா?

பார்வையால் அறிமுகம் ஆனோம்,
மௌனங்களால் பேசிக் கொண்டோம்,

நெடுஞ்சாலை தூரம் எல்லாம் 
கை கோர்த்து நடந்து சென்றோம்,

சிறு சிறு சண்டைகளில் 
பிரியாமல் நேசம் செய்தோம்,

கண்முன் பேசாமல் 
கனவுகளில் சிநேகம் செய்தோம்,

உறவுகளிடம் அனுமதி வாங்கி,
ஆயுள் வரை அன்பு செய்ய
இதயம் துடிக்கிறது - உன்னை
வெளியே அழைக்கிறது

வீடு தாண்டி வருவாயா ?

- மன்சூர்

No comments:

Post a Comment