Thursday, 2 April 2015

தோழி துணைவியானால்!

அதிகாலை சோம்பல்
சுகமாகும்..

அன்பாலே வீடு
அழகாகும்..

சிற்றுண்டி வேளை
இனிதாகும்..

சின்ன சின்ன ஊடல்
கனிவாகும்..

முகம் பார்க்கும் கண்ணாடி
கல்வெட்டு ஆகும்..

பிரிந்து சேருகையில்
TV remote பகையாகும்..

சமயலறையில்
பாத்திரங்கள் வாய் பேசும்..

படுக்கையறையில்
தலையணைகள் வாய் பேசும்..

தொலைபேசியும், நண்பர்களும்
பகையாகும்..

இரவில் மின்வெட்டு
வரம் அகும்..

ப்ரியமான தோழி
துணைவி ஆகும் போது..

- மன்சூர்

3 comments: