Monday, 11 March 2013

பிழையென்ன செய்தேன்

கண்ணாளனே,

நாண் அறுந்த
வீணை போல
நானும்
நாணி
நின்றேன்.


பேட்சிழந்து
ஊமை ஆனேன்


உன்
சுடுஞ்சொற்கள்
என் நெஞ்சை
சுட்டபோது.


நேசம் வைத்த
நெஞ்சுக்குள்
நெருப்பு வைத்து
போகின்றாய்.


போகட்டும்


அனல் கூட
ஒரு நாள்
ஆறி விடும்.


ஆறாத் துயரில்  -என்னை
ஆழ்த்திப்  போகிறாய்.


போகட்டும்


துயர் கூட

ஒரு நாள்
நீங்கி விடும்.


ஆனால்


மௌனக்  கல்லெறிந்து
காயம் தருகிறாய்


சோகச் சிலுவைக்குள்  -என்னை
சிறை வைத்துச் 
செல்கிறாய்.


பிழையென்ன செய்தேன்?


உன் மௌன பூட்டுடைத்து
எந்தன்
துயர் நீக்கு.


இல்லை
நீங்கி செல்வது
என்றால்
என்னுயிரையும்
உன்னோடு
வாங்கி சென்று விடு.


என்

நெஞ்சை பிளந்து
போகிறவனே,


பூமி பிளவுற்று
மடியேந்த
என் தாய்
பூமாதேவி அல்ல;


மதுரைக்கு தீ வைத்து
முறையிட
இது ஒன்றும்
பாண்டியன் சபை அல்ல;


காதல்
பெருங்குற்றம் 
என்றால்,


முதலில்
ஆதாம்-ஏவாள்
கூண்டில் ஏறட்டும்!


என்னவனே,

தோல்வியை வெளிப்படுத்த
எந்த பெண்ணும்
தாடி வைப்பதில்லை


புண்பட்ட நெஞ்சுக்கு
புகைவிட தேவையும் இல்லை


ஆடவன் குடி கொண்ட
நெஞ்சினில்
ஆல்கஹால் சேர்வதும் இல்லை 


இவை எல்லா பெண்களுக்கும்
பொருந்துவதும் இல்லை


கொண்ட
காதலுக்கு
உதிரும்
என்
கண்ணீரே சாட்சி


எப்போதடா
எனக்கு
கொடுப்பாய்
மீட்சி
 


- மன்சூர் 

No comments:

Post a Comment