Tuesday, 12 March 2013

பிறந்தநாள் வாழ்த்துகள்..(Shreya Ghosal)



பெயரில் சங்கீதத்தை வைத்து கொண்டு 
மௌனத்தை
மொழி பெயர்க்கும்
பெண்களின் மத்தியில்


இசையை சுவாசிக்கும்
இசை-பிரியை நீ




உன்னை நேசிக்கும்
இசை வெறியர்களில் 

நானும் ஒருவன்

உன் இசைத் தென்றலுக்கு
தலை சாய்க்கும்
செடி போல் நானும்
தலையாட்டி  பொம்மை ஆனேன்


தாயின் தாலாட்டு போல
தினமும்
உன் குரல் கேட்டு
துயில்கிறேன்..


(உன்) இசை
இல்லை என்றால்
என்னவாகும்
(என்) வாழ்கை!


- மன்சூர் 

No comments:

Post a Comment