Friday, 8 March 2013

காதல் செய்வதே சித்தம்..


இதய துடிப்பில்
இருவேறு சப்தம்


இரவுப்பொழுதெல்லாம்
செல்போன் யுத்தம்


தலப்பாகட்டு பிரியாணியும்
தலையணையும்
இருந்த போதும்
ஊன் - உறக்கம்
இரண்டும் இல்லை


மெச்சும் நண்பர்கள்
மொய்க்கும் உறவினர்கள்
புடை சூழ இருந்தும்
தனிமையே என் நாட்டம்


தேடி வந்தோர் எல்லாம்
நாடி பிடித்து பார்க்க
நடை தளர்ந்த பெருசு முதல்
நடை பழகும் பொடிசு வரை
சொன்னார்கள்..


 "தலை முதல்
கால் வரை பித்தம்"


இனி நீ

காதல் செய்வதே சித்தம்..

- மன்சூர் 

No comments:

Post a Comment