Wednesday, 6 March 2013

அரும்புமீசை வயது ..

பருக்கள் முளைக்கும் - காதல்
பருவம் பொய்க்கும்

அரும்பு மீசை வயது
குறும்பு செய்யும் மனது
 
பார்வைகள் பரிமாறி
இதயங்கள் பரிணாமிக்கும்

பரஸ்பர பரவசம்
பிரியத்தின் பிரவேசம்
 
எடிசனின்
எள்ளு பேரனாய்
நாயகன் கண்களால் மின்சாரம் பாய்ச்ச
நாயகியோ பெருவிரலால் மன்கோலம் இடுவாள்

காதல் மொட்டு விட்டதும் - காதலி
கசக்கி எறிந்த 

குப்பை காகிதம் பூக்களாகும்
காது குடைந்த கோழியிறகு கூட
பொக்கிஷம் ஆகும்


தொலைபேசி நண்பன் ஆகும்

நண்பன் தொல்லை ஆவான்
தலையணை துணையாகும்
தனிமை சுகமாகும்

- மன்சூர் 

No comments:

Post a Comment