புன்னகை வீசும் புயலே
ஏனடி
என் நெஞ்சக்கரையில்
மையம் கொண்டாய்
மையம் கொண்டது போதாதென
மையல் கொண்ட மயிலே உன் புன்னகையில்
வேரோடு சாய்ந்தது
மரம் மட்டும் அல்ல
என் மனசும் தான்..
என் இதய வானில்
சூழ்ந்து நிற்கும்
கருநீல மேகமே!
ஏனடி ..
முத்த மழையை
பொழிய மறுக்கிறாய்?
என் பருவக்கரையை
கடக்கும் முன்
ஒருமுறை -காதல்
பார்வை பாரடி
புயல் பெண்ணே!
- மன்சூர்
ஏனடி
என் நெஞ்சக்கரையில்
மையம் கொண்டாய்
மையம் கொண்டது போதாதென
மையல் கொண்ட மயிலே உன் புன்னகையில்
வேரோடு சாய்ந்தது
மரம் மட்டும் அல்ல
என் மனசும் தான்..
என் இதய வானில்
சூழ்ந்து நிற்கும்
கருநீல மேகமே!
ஏனடி ..
முத்த மழையை
பொழிய மறுக்கிறாய்?
என் பருவக்கரையை
கடக்கும் முன்
ஒருமுறை -காதல்
பார்வை பாரடி
புயல் பெண்ணே!
- மன்சூர்
No comments:
Post a Comment