
விழித்திடு தோழா விழித்திடு...
தலையணை உறக்கம்
கலைத்திடு தோழா
தமிழர் உரிமைக்குரல் கேட்டு
விழித்திடு தோழா
கண்ணிருந்தும் குருடனாய்
செவியிருந்தும் செவிடனாய்
வாயிருந்தும் ஊமையாய்
உயிரிருந்தும் வெற்றுடலாய்
இன்னும் எதனை காலம் - இந்த
ஈனப் பிழைப்பு
ஈழம் நம் அடையாளம் தானே
அக்குலத்தோர் நம்மவர் தாமே ..
இன்னும் எதை காண
காத்திருக்கிறோம்
தலை நகரம்
கொலை நகரமாய்
கொக்கரித்த போதும் -அங்கே
உடன் பிறாவ ஒருத்தி
உருக்குலைந்த போது
உறுமிய குரல் எங்கே
உள்ளூரில்.,
உருக்குலைந்த
உடன் பிறப்புக்காக
கர்ஜித்த உரிமை எங்கே
மிச்சமிருக்கும்
(ஈழ) தமிழர்களுக்கு
குரல் கொடுக்க
யாருமிலர் நம்மை விட
இன்னுமொரு
இனப் படுகொலை அரங்கேற
விதி செய்கிறது
சதி கும்பல்
விழித்திடு தோழா
விழித்திடு...
- மன்சூர்
No comments:
Post a Comment